-->

சிறிய புகைப்படங்களை தரம் குறையாமல் பெரிதாக்கலாம்

இந்த பதிவை எழுதும் முன்பாக நிறைய ஆன்லைன் தளங்கள் மற்றும் இன்னும் சில மென்பொருள்கள் என நிறைய சோதித்து பார்த்த இறுதியில் கொஞ்சம் எனக்கு திருப்தியளித்தவுடன் இந்த பதிவை எழுதுகிறேன் இனி நீங்கள் இந்த Photo Enlarger
மென்பொருளை தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யவேண்டியது இல்லை நேரடியாக இயக்கலாம், தரவிறக்கி முடித்த பின்னர் SmillaEnlarger இருமுறை கிளிக்கினால் இயங்க தயாராகிவிடும. இந்த மென்பொருள் இப்போது பீட்டாவாகவே இருக்கிறது.

அதற்கு முன்பாக இந்த சின்ன விஷயத்தையும் படித்துவிடுங்கள் நீங்கள் பெரிதாக்க விரும்பும் படம் குறைந்த பட்ச தரமாவது இருக்கவேண்டும் படம் தரமில்லாத போது நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு படத்தை மாற்றினாலும் படம் சிதைந்து போயிருக்கும். மேலும் இந்த மென்பொருள் எந்தளவிற்கு உங்களுக்கு தீர்வாய் அமையப்போகிறது என்பதும் எனக்கு தெரியாது இருப்பினும் ஓரளவிற்கு நிச்சிய்ம் இந்த பதிவு தீர்வு அளிப்பதாய் இருக்கும்.

இந்த மென்பொருளில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன நான் அடிப்படையை மட்டுமே எழுதுகிறேன் இனி நீங்களாகவே கொஞ்சம் முயன்று மற்ற விஷயங்களையும் பயன்படுத்தி பாருங்கள். இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நீங்கள் செய்யவேண்டியவற்றை நான் அடையாளமிட்டு எண்கள் கொடுத்துள்ளேன் அதன் படியே செய்து விடுங்கள் எண் 1ல் கிளிக்கி நீங்கள் விரும்பும் படத்தை உள்ளிடவும், எண் 2ல் அளவை கூட்டலாம் அல்லது கீழிருக்கும் Custom என்பதன் வழியாகவும் வேண்டிய அளவு கொடுக்கலாம், எண் 3ல் அளவை மாற்றவும் சேமிக்கவும் கொடுக்கும் கட்டளை, எண் 4ல் கிளிக்கி நீங்கள் கொடுத்த கட்டளை முடிவடைந்துவிட்டதா என பார்த்துக்கொள்ளலாம், எல்லாம் முடிந்தால் படத்தின் அளவு பெரியதாக இருக்கும் நீங்கள் கொடுத்த படத்தின் தரத்தை பொறுத்து அவுட்புட் இருக்கும்.



இல்லை எனக்கு படத்தை மொத்தமாக மாற்ற தேவையில்லை ஒரு குறிப்பிட்ட பாகத்தை மட்டும் பெரிதுபடுத்தி பார்க்க ஆசை அல்லது சேமிக்க ஆசை அதற்கும் வழி இருக்கிறது சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் நான் உங்களுக்காக மாற்றிய ஒரு பெரிய படத்தை இனைக்க நினைத்தேன் ஆனால் படத்தின் அளவு 7 எம்பி இருந்ததால் இனைத்தாலும் தளம் திறப்பதில் பிரச்சினை ஆகும் எனவே விட்டு விட்டேன். தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் வித்யாசம் உணர்வீர்கள்.



போட்டோஷாப் உபயோகிப்பவர்கள் எந்தவெரு புகைப்படத்தையும் போட்டோஷாப் வழியாகவே 10% அளவு அதிகரித்தாலும் பெரிய சிதைவு இருக்காது முயற்சித்து பாருங்கள் மறக்காமல் ரெசல்யூசன் 300 வைத்துக்கொள்ளுங்கள்.