-->

தற்காலிக (trial) மென்பொருட்களை நிரந்தரமாக உபயோகிக்க.


                                           ஒரு தற்காலிக மென்பொருள் என்பது அனேகமாக  முப்பது நாட்களுக்குள் முடிவடைந்துவிடும். இது நமக்கு அறிந்த ஒன்றே. அது நமது கணிணியில் உள்ள நேரம் திகதியை வைத்தே அதனை தீர்மானித்துக் கொள்கிறது. அனேகமானவர்கள் தமது கணிணியின் நேரம் திகதி என்பவற்றை மாற்றி இதனை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வார்கள்


                                       இதை தவிர்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவுகின்றது. இந்த மென்பொருளை வைத்து நீங்கள் நிறுவிய (install)  மென்பொருளின் நேரத்தை உறைய வைக்கலாம் அதனால் கணிணியின் நேரத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை. தயவு செய்து இந்த மென்பொருளை காலவதியாகிய (expire) மென்பொருளின் மீது பயன்படுத்தாதீர்கள். இப்பொழுது இதனை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவவும்.

                                                    இப்பொழுது தற்காலிக மென்பொருளின் .exe கோப்பை (file) கண்டு பிடிக்கவும். அதற்கு ஒரு தனி நேரத்தை குறிப்பிட்டு முகப்பில் (desktop) ஒரு குறுக்கு வழி குறும்படத்தை (shortcut icon) உருவாக்கவும். இப்பொழுது நீங்கள் எளிதாக அந்த மென்பொருளை நீண்ட காலம் வரை பயன்படுத்தலாம்.

தரவிறக்க : DOWNLOAD