-->

ஜிமெயிலில் ஓடும் கையெழுத்து

இந்த வசதி இரண்டு தளங்களில் கிடைக்கின்றன ஆனால் நீங்கள் GIF-MANIA பயன்படுத்துங்கள் வசதிகள் சிறப்பாக இருக்கிறது மற்றொரு தளம் 123PIMPION இருக்கிறது இரண்டில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதையே பயன்படுத்துங்கள் ஆனால் நான் இதற்காக எடுத்துக்கொண்டது GIF-MANIA அதனால் பதிவும் இதை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறேன்.

நீங்கள் தளம் சென்றதும் இப்படியாக இருக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.



நீங்கள் ஓக்கே கொடுத்ததும் இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் நீங்கள் உருவாக்கிய GIF இமேஜை நேரடியாக கணினியில் தரவிறக்கலாம் அல்லது மின்னஞ்சலில் வரவைக்கலாம் இரண்டும் ஒன்றுதான் நீங்கள் நேரடியாகவே தரவிறக்குங்கள் மின்னஞ்சல் திறக்கும் நேரம் மிச்சமாகும்.



இனி நீங்கள் அடுத்ததாக ONLINE-IMAGE-EDITOR சென்று இமேஜே அப்லோட் செய்து தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் அதற்கான வழிமுறைகளை கீழிருக்கும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.









சரி இதுவரை எல்லாம் சரியாய் செய்துவிட்டீர்கள் அடுத்து நாம் செய்யவேண்டியது நாம் உருவாக்கிய இமேஜை ஏதாவது ஒரு தளத்தில் அப்லோட் செய்து அதன் முகவரியை எடுக்கவேண்டும் இதற்கும் இரண்டு தளங்கள் பரிந்துரை செய்கிறேன் PHOTOBUCKET மற்றும் IMAGESHACK இதில் ஏதாவது ஒரு தளத்தில் அப்லோட் செய்துவிடுங்கள் நான் PHOTOBUCKET தளத்தில் அப்லோட் செய்கிறேன், அப்லோடு செய்து முடிந்ததும் Direct Link என்பதன் நேராக இருக்கும் லிங்க் காப்பி எடுத்துவைத்துக்கொள்ளவும் இதைத்தான் இனி நாம் ஜிமெயில் கையெழுத்து பகுதியில் இனைக்க போகிறோம் இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவு படுத்துகிறேன் இதில் இருக்கும் HTML லிங்க் காப்பி எடுத்து நேரடியாக GIF இமேஜை பதிவில் இனைக்கலாம் அப்படி இனைக்கும் போது நீங்கள் அப்லோடு செய்த தளத்தின் முகவரி இருக்கும் அதை நீக்கவில்லையென்றால் படத்தை கிளிக்கும் போது அவர்கள் தளத்திற்கு கொண்டு செல்லும் அதற்கு பதிலாக அவர்களின் தள முகவரியை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக உங்கள் தளமுகவரியையோ அல்லது பேவரிட் தள முகவரியையோ கொடுக்கலாம்.



இனி நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து வலது பக்க மேல் மூலையில் இருக்கும் Settings என்பதை திறந்து முதலாவதாக இருக்கு General டேப்பில் கீழே பாருங்கள் Signature:என இருக்கும் அங்கு சென்று படம் இனைப்பதற்கான இடத்தை நான் கீழிருக்கும் படத்தில் அடையாளம் காட்டியிருக்கிறேன் பாருங்கள் அதை கிளிக்கி நீங்கள் முன்னதாகவே காப்பி எடுத்து வைத்திருந்த URL-லை இங்கே ஒட்டி விடுங்கள் ஓக்கே கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான். இனி உங்கள் மின்னஞ்சலில் கம்போஸ் செய்து பாருங்கள் உங்களுக்கு புரியும்.



மேலும் நான் மேலே குறிப்பிட்ட ஜிமெயிலில் HTML கையெழுத்து பதிவில் இருக்கும் ஆட் ஆன் மற்றும் இந்த ஒடும் கையெழுத்து இரண்டையும் இனைத்து இன்னும் சில வசதிகளை உங்கள் மின்னஞ்சலில் சேர்க்கமுடியும் பதிவின் நீளம் கருதி நிறைவு செய்கிறேன் இனி வரும் சந்தேகங்களை கருத்துரையில் பகிர்வோம். இந்த மாதிரியான முறைகளை அலுவலக மின்னஞ்சல் அனுப்பும் நேரத்தில் பயன்படுத்தாதீர்கள்.