-->

நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்

இந்த பதிவின் வாயிலாக ஒரு குழந்தை அல்லது பெரியவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதிக்கான பலன்கள், அவர்கள் பெயருக்கான பலன்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக பெயரின் முதல் எழுத்துக்கான பலன்கள், அவர்களுக்கான நிறம், உடல் அமைப்பு, நோய்கள் என்பதாக நிறைய விஷயங்களை பார்க்கலாம் ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் நான் தரவிறக்க கொடுக்கும் இரண்டு பிடிஎப் பைல்களையும் அவசியம் தரவிறக்கி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும்


நீங்கள் விரும்பும் தகவல்களை எளிதாக பெற முடிகிற வகையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் என வரிசையாக புக்மார்க் செய்து கொடுத்திருக்கிறேன் தகவல்கள் இனையத்தில் இருந்து எடுக்கபட்டவை தான்.

நீங்கள் இனையத்திலேயே சில தகவல்களை படிக்க விரும்பினால் Dinakarn Numerology அல்லது Tamil Kalanjiyam Numerology இந்த இரண்டு தளங்களில் ஒன்றில் படிக்கலாம் இரண்டு தளங்களும் ஒரே தகவலைத்தான் கொண்டிருக்கின்றன இதில் யார் யாரிடம் காப்பி எடுத்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

நான் கொடுக்கபோகும் இரண்டு பிடிஎப் புத்தகங்களும் நியுமரலாஜி (எண் கணிதம்) புத்தகம் என்றாலும் இரண்டிலும் வித்யாசம் இருக்கும் ஆகையால் இரண்டையும் நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே நியுமரலாஜி (எண் கணிதம்) என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு உங்களால் படித்து புரிந்துகொள்ள முடியும் எனவே தேவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.

முதலாவதாக முதலாவதாக Birth Date Horoscope Tamil இதில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள Dinakarn, Tamil Kalanjiyam இரண்டிலும் எடுத்து தொகுத்த்து தான் ஆனால் அதனோடு மேலும் சில அடிப்படை தகவல்களை இனையத்தில் இருந்து எடுத்து தொகுத்திருக்கிறேன்.இரண்டாவதாக Numerology En Jothidam En kanitham இந்த புத்தகம் இனையத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான் எளிமையாக படிப்பதற்கு வசதியாக புக்மார்க் வசதி மட்டும் ஏற்படுத்தியிருக்கிறேன்.பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் பகிர வேண்டிய விஷயங்கள் மொத்தமும் பிடிஎப்பில் தொகுத்து இருப்பதாலும் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் நேரம் கிடைத்தால் அடுத்ததாக வாஸ்து சாஸ்திரம் பற்றியதான ஒரு பதிவை எழுதி ஜோதிடம் குறித்து நம் தளத்தில் வரும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.