-->

கணினியில் எந்த கோப்பையும் என்கிரிப்ட் செய்யலாம்

வணக்கம் நண்பர்களை இந்த பதிவு ஒரு மென்பொருளை அல்லது ஏதாவது ஒரு கோப்பு எதுவாக இருந்தாலும் எப்படி அதை வேறொரு விதமான பார்மட்டாக மாற்றி அதை என்கிரிப்ட் செய்து விடுவது உதாரணமாக உங்களிடம் ஒரு மென்பொருள் இருக்கிறது அதிகமான மென்பொருள்களின் எக்ஸ்டென்ஷன் .EXE என்பதாக இருக்கும் ஆனால் இந்த மென்பொருள் வழியாக நாம் என்கிரிப்ட் செய்துவிட்டால் அதன் எக்ஸ்டென்ஷன் . xcon என்பதாக இருக்கும் இது எல்லா மென்பொருளுக்கும், நாம் உபயோகபடுத்தும் எந்த கோப்பாக இருந்தாலும் என்கிரிப்ட் செய்தால் . xcon என்பதாகவே இருக்கும்.

இதனால் என்ன பயன் அவ்வளவு எளிதாக யாரும் திறக்க முடியாது ஏன் நீங்களே அதன் கடவுச்சொல்லை மறந்துவிட்டாலும் திறக்க முடியாது. நான் இதே போன்றதொரு வேறொரு வழிமுறையை நான் மே-29-2010 அன்று போல்டர் மற்றும் பைல்களை பாதுகாப்பாக வைக்க வழி என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த மென்பொருள் பைல்களை வெளியில் காண்பிக்காது ஆனால் இது காண்பிக்கும் ஆனால் திறக்க முடியாது.

இனி இந்த Conceal Setup மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், நிறுவி முடிந்த்தும் நீங்கள் செய்ய வேண்டியதை கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு மென்பொருளை என்கிரிப்ட் செய்தவுடன் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.



இனி நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் எந்த பைலை என்கிரிப்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதை இழுத்து பூட்டு இருக்கும் இடத்தில் விடவும்.



இப்போது இப்படியாக ஒரு சிறிய பாப் அப் வரும் அதில் நீங்கள் செய்யவேண்டியது Destination என்பதில் நீங்கள் உள்ளிடும் கோப்பு எந்த இடத்தில் மாற்றம் செய்து வரவேண்டும் Location என்பதை கொடுக்கவும் அடுத்தபடியாக கடவுச்சொல் இருமுறை ஒரே மாதிரியாக கொடுக்கவும் பின்னர் கொடுத்து முடித்ததும் மேலே இருக்கும் Save and Close என்பதை சொடுக்கினால் போதும் உங்கள் பைல் இப்போது என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் அப்படியே அதன் கீழே பாருங்கள் Delete Original File என்பதாக இருக்கிறது அதை வேண்டுமானால் பயன்படுத்துங்கள் அதை பயன்படுத்தினால் நீங்கள் உள்ளிடும் ஒரிஜினல் கோப்பு அழிக்கப்பட்டு அதற்கு பதிலாக என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பு மட்டும் இருக்கும். முதலில் சோதனை செய்து பார்த்துவிட்டு பயன்படுத்துங்கள்.



இதே வழிமுறைதான் என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பு திறப்பதற்கும் முதலில் என்கிரிப்ட் செய்ய பூட்டு இட்ட இடத்தில் பைலை DRAG & DROP செய்தீர்கள் இப்போது சாவி இட்ட இடத்தில் DRAG & DROP செய்யப்போகிறீர்கள் அவ்வளவுதான்.

இதில் எந்த கோப்பையும் உள்ளிட முடிகிறது ஆனால் சாதரண போல்டரில் பைல்களை இட்டு மறைக்க நினைத்தால் முடிவதில்லை அதே நேரத்தில் மொத்த பைல்களையும் ஒரு போல்டரில் இட்டு அதை விண் ரார் கோப்பாக மாற்றிய பின்னர் மொத்த போல்டரையும் என்கிரிப்ட் செய்ய முடிகிறது பயன்படுத்தி பாருங்கள்.