-->

பாஸ்வேர்ட் இட்ட சிடி டிரைவ் திறக்கலாம்

சமீப காலங்களாக பென்டிரைவ் அதிகமான புழக்கத்தில் இருப்பதாலும் அதில் அதன் வழியாக வைரஸ் வர சாத்தியகூறு அதிகம் உள்ளதாலும் சில கணினிகளில் அதை பயன்படுத்த முடியாதவாறு செய்திருப்பார்கள் அதை பற்றி நாம் ஏற்கனவே நம் பதிவின் வழியாக பார்த்திருக்கிறோம் ஒரு வேளை அப்படிப்பட்ட கணினிகளில் எப்படி தகவல்களை காப்பி எடுப்பது என்பது பற்றியும் பார்த்திருக்கிறோம் இதெயெல்லாம் ஆராய்ந்த சில நண்பர்கள் தகவல்களை கையால குறுந்தகடு பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் இந்த விஷயம் வீடு முதல் அலுவலகங்களில் உள்ள கணினிகளுக்கும் பொருந்தும்.

நாம் நம்பும் சிலர் கூட நம் கணினியில் தகவலை எடுக்கக் கூடும் எனவே இந்த கணினியில் சிடி டிரைவ் திறக்கவிடாமல் செய்துவிட்டால் ஒருவேளை தகவல்கள் திருடப்படுவதை தடுக்கலாம் நான் இங்கே இரண்டு மென்பொருள்களை இனைத்திருக்கிறேன் இங்கே தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொண்டு அதில் தேவையான கீ செட்டிங் செய்து பாஸ்வேர்ட் செட் செய்து விடுங்கள். இனி உங்களை அறியாமல் யாரும் உங்கள் டிரைவின் வழியாக தகவல்களை குறுந்தகடில் பதிய முடியாது.

சரி இப்போது நீங்கள் பாதுக்காப்புக்காக ஏற்படுத்திய பாஸ்வேர்ட் மறந்துவிட்டீர்கள் என்ன செய்வீர்கள் ஒன்றும் பதற வேண்டியதில்ல இங்கு அதற்கான மூன்று மென்பொருள்கள் இனைத்திருக்கிறேன் தேவைப்படுபவர்கள் இங்கு தரவிறக்கவும் இந்த மூன்று மென்பொருள்களும் பாஸ்வேர்ட் இட்ட திறக்க முடியாத சிடி, டிவிடி டிரைவ்களை அழகாக திறந்து விடும் இது பற்றி நான் முன்னமே எழுதிய பதிவு தங்களின் மேலதிக தகவலுக்காக படித்து பாருங்கள்.