-->

உங்கள் நெருப்புநரியின்(FIREFOX) வேகத்தை அதிகப்படுத்த...!!!



ன்று அதிகமானோர் பயன்படுத்தும் உலவி நெருப்புநரி, இது பிரபலம் அடைய காரணம் இதன் வளைந்துகொடுக்கும் தன்மை மற்றும் நீட்சிகளாகும். இதில் சில அமைப்புகளை மாற்றுவதன் மூலம் நமது இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம், அது எவ்வாறு செய்வது என்று இப்போது பார்ப்போம்.


படி-1: உங்கள் உலவியின் அட்ரஸ் பாரில் about:config என்று டைப் செய்து எண்டர் கொடுங்கள்..


படி-2: கீழே உள்ளது போல ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும் அதில் I'll be careful என்பதனை க்ளிக் செய்திடுங்கள்.

  
படி-3: இப்போது தோன்றும் விண்டோவில் Filter  என்ற இடத்தில் network.http என்று டைப் செய்யவும்.


படி-4: இப்போது தெரியும் செட்டிங்குகளில் பின்வருவனவற்றை அதில் உள்ளவாறு மாற்றியமைக்கவும்.
  •  “network.http.pipelining” என்பதை “true” என்று செட் செய்யவும்.
  •  “network.http.proxy.pipelining” என்பதை “true” என்று செட் செய்யவும்.
  • network.http.pipelining.maxrequests” என்பதை 30 என்று செட் செய்யவும்.
இதனை செய்வதற்கு நீங்கள் அந்த செட்டிங்குகளீன் மீது டபுள் க்ளிக் செய்தால் போதும்.

படி-5: அதே விண்டோவில் ஏதேனும் ஒரு இடத்தில் ரைட் க்ளிக் செய்து அதில் New-->Integer என்பதை தேர்வு செய்து தோன்றும் ஒரு விண்டோவில் பின்வருமாறு டைப் செய்யவும் nglayout.initialpaint.delay. பின் அதன் மதிப்பை 0 என்று கொடுக்கவும்.


அவ்வளவுதான் உங்கள் உலவியை மறுதுவக்கம் செய்து பாருங்கள் உங்களுக்கே மாற்றம் தெரியும்.