நாம் விரும்பும் வாசகத்தை போட்டோ பேசுவதை போல அமைத்தால்
அனைத்து வகைக் கதைகளுமே சித்திரங்களுடன் வந்தன. அவை பேசுவதை கட்டங்கள்,
நீர்க்குமிழிகள் என அமைத்து அவற்றில் காட்டப்பட்டன. இவற்றைப்
பார்க்கையில், படிக்கையில், நாமும், நம் போட்டோக்களில், நாம் விரும்பும்
வாசகத்தை இதே போல நீர்க்குமிழிகளில் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என
எண்ணலாம். இந்த எண்ணத்தை நிறைவேற்றும்
வகையில் நமக்கு ஓர் இணைய தளம் உள்ளது. இதன் பெயர் Phrase It!. இதற்கு "வாசகமிடு' என்று பொருள். இந்த இணைய தளத்தின் முகவரி site.
இந்த தளத்தில் நுழைந்தவுடனேயே, நீங்கள் செயலில் இறங்கலாம். முதலில் எந்த
போட்டோக்கள், படங்களுக்கு வாசகங்களை நீர்க்குமிழ்களில் அமைக்க வேண்டுமோ,
அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹார்ட் ட்ரைவ்,
யு.எஸ்.பி.
ட்ரைவ், பேஸ்புக் தளம் என எதிலிருந்து வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து இந்த
தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். அதனுடைய ரெசல்யூசன் 640 x 480 பிக்ஸெல்
ஆக இருக்க வேண்டும். பின்னர், இந்த படங்களில் நீர்க்குமிழிகளை
உண்டாக்கலாம். அவற்றில் உங்கள்
வாசகங்களையும்
இணைக்கலாம். உங்கள் கற்பனைப்படி அமைத்த பின்னர், இந்த தோற்றம் எப்படி
இருக்கும் என்பதை முன்னோட்டமாகக் காணலாம். உங்களுக்கு திருப்தியாக
இருந்தால், அப்படியே சேவ் செய்து விடலாம். அல்லது மேலும் சில மாற்றங்கள்
தேவைப்பட்டால், அவற்றை அமைக்கலாம். பின்னர் சேவ் செய்திடலாம். அல்லது
அப்படியே யாருக்கேனும்
மின்னஞ்சலில்
லிங்க் அமைத்து, உங்கள் முகவரிக்கு அனுப்பச் செய்யலாம். அந்த லிங்க்கினை
மற்றவர்களுக்கும் தெரிவிக்கலாம். அவற்றைப் பின்னர், அந்த வாசகங்களுடன்
பிரிண்ட் எடுத்து, நண்பர்களுக்கு போட்டோவினை அனுப்பலாம். வீட்டில் மாட்டி
வைக்கலாம். ஒருமுறை செய்து பார்த்து, உங்கள் குழந்தைகளின் படங்களை அமைத்து
அவர்களை குஷிப்படுத்துங்கள்.
0 comments:
கருத்துரையிடுக