-->

போர்ட்டபிள் சீடி/டிவீடி பர்னிங் டூல்

சீடி மற்றும் டிவீடிக்களில் தகவல்களை பதிய வேண்டுமெனில் அனைவருடைய நினைவுக்கும் வருவது நீரோ மட்டும்தான், இந்த மென்பொருளை பணம் கொடுத்துதான் பெற வேண்டும். இலவசமாகவும் சந்தையில் நிறைய மென்பொருள்கள் கிடைக்கிறன இவையாவும், கணினியில் நிறுவி மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் கணினியில் மென்பொருளை நிறுவாமலேயே சீடி/டிவீடிக்களில் தகவல்களை பதிவேற்றம் செய்து கொள்ள ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. நீங்கள் உங்களுடைய நண்பர்களுடைய கணினியை பயன்படுத்தும் போது அந்த கணினியில் சீடி ரைட்டிங் டூல்கள் எதுவும் நிறுவியிருக்காது. அதுபோன்ற கணினிகளில் சீடிக்களை பதிய வேண்டுமெனில் எதாவது ஒரு போட்டபிள் பர்னிங் மென்பொருளை நாட வேண்டும். அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் 7Burn.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள் இருவேறு முறைகளில் கிடைக்கிறது. இன்ஸ்டால் செய்து பயன்படுத்துமாறும், மற்றொன்று கணினியில் நிறுவாமலேயே பயன்படுத்துமாறும் கிடைக்கபெறுகிறது. இந்த மென்பொருள் மூலமாக டேட்டா, ஆடியோ, ஐஎஸ்ஒ போன்ற பைல்களாக பதிவு செய்ய முடியும்.


ஆடியோ பைல்களை சீடிக்களில் பதிவேற்றம் செய்ய மிகவும், பயனுள்ள மென்பொருள் ஆகும். மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் CD-R, CD-RW, DVD ROM, DVD-RDVD-RAM, DVD+R, DVD+RW, DVD+R Dual Layer, DVD-RW, DVD-RW Sequential, DVD-R DL Sequential, DVD-R Dual Layer, DVD+RW DL, HD DVD-ROM, HD DVD-R, HD DVD-RAM, Blu-ray DVD (BD-ROM), Blu-ray media Sequential, Blu-ray media, Blu-ray Rewritable media போன்ற சீடிக்களில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.