
அவாவாறான சந்தர்ப்பங்களில் கையடக்கமான (Portable) மென்பொருட்கள் இருந்தால் நமது வேலைகளை இலகுவாக்கிக் கொள்ளலாம்.
எங்கும் எடுத்துச் செல்ல கூடிய Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!
இதற்கு வேறாக மென்பொருட்களும் தேவையில்லை, இதற்கு தேவைப்படுவது WIN RAR மென்பொருள் மட்டுமே.
இங்கு portable photoshope 7.0 application ஒன்றை உருவாக்குவது எப்படியென பார்ப்போம்.
photoshope 7.0 (ஊடக இயக்கி) ஒன்று செயற்பட தேவையான கோப்புகளை தெரிவுசெய்து கொள்ளுங்கள்.

அவற்றை WinRar archive ற்கு add செய்து கொள்ளுங்கள்.


இப்பபொழுது Advanced எனும் பகுதியில் SFX options என்பதை தெரிவு செய்யுங்கள்.

பின் General tab இல் பிரித்தெடுத்த பின் செயல் படுத்த வேண்டிய கோப்பின் பெயரை எழுதுங்கள்.

பின்னர் Text and Icon எனும் பகுதியில் பின்வருமாறு மாற்றங்களை செய்யுங்கள்.

அதன் பின் SFX option இல் உள்ள Modes tab பை கிளிக் செய்து,

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு மாற்றங்களை செய்யுங்கள். அவ்வளவே தான் கையடக்க மென்பொருள் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதை எந்த கணினியிலும் நிறுவாமல் பயன்படுத்தலாம்.

0 comments:
கருத்துரையிடுக