-->

கருப்பு வெள்ளை நிழல்படத்தை எளிதாக கலராக மாற்றலாம்

வணக்கம் நண்பர்களே முன்பு போல அதிகம் பதிவுகள் எழுதமுடியவில்லை பணிச்சுமையோடு மன அழுத்தமும் சேர்ந்து எழுதுவதற்கான சூழலை தடுத்து விடுகிறது பொதுவாகவே நான் எழுதுவதை கொஞ்சம் விரும்புகிற பக்கத்தை சேர்ந்தவன் அது என் சுய நலம் மட்டுமல்ல கூடவே எனக்கு தெரிந்த நல்ல உபயோகபடுகிற விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மற்றவர்களுக்கு பயனபடும் என்கிற உள்ளுணர்வு தான் காரணம் அதனால் தான் முடிந்தவரை சிறந்த நல்ல தகவல்களை மட்டுமே இது வரை பகிர்ந்து வந்திருக்கிறேன் விதி விலக்காக சில பதிவுகளும் இருக்கும். சரி நண்பர்களே இனி நேரடியாக பதிவுக்குள் வந்துவிடுவோம்.


பொதுவாக நம்மிடம் இருக்கும் நமது மூதாதையாரின் நிழல்படங்கள் கருப்பு வெள்ளை சார்ந்ததாகவே இருக்கும் அப்படி இருக்கும் வெள்ளை நிற நிழல்படங்களை கலராக மாற்ற போட்டோஷாப் மென்பொருள் உதவும் அதிலும் கொஞ்சம் மெனக்கெட்டாலே சரி செய்யமுடியும் போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு எளிதான காரியம் தான் ஆனால் போட்டோஷாப் தெரியாத எத்தனை நண்பர்கள் இருக்ககூடும் அந்த பிரச்சினைக்கு தீர்வாக இந்த பதிவு இருக்கும் ஆனால் இதிலும் கொஞ்சம் சிரத்தையோடு செய்தால் மிகச்சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.

இனி ReColor (Black and White to Color) 9எம்பி அளவுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்