-->

எளிமையான யூடியூப் வீடியோ டவுன்லோட் தரவிறக்கம்

வணக்கம் நண்பர்களே யூடியுப் வீடீயோவை தரவிறக்க எத்தனையோ தளங்கள் இருந்தாலும் சில நேரங்களில் பதில் எர்ரர் என்பதை பதிலாக இருக்கிறது அதற்கு தீர்வாக இந்த பதிவை எழுதிகிறேன் இது நிறைய நண்பர்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் தெரியாத நண்பர்கள் இருக்க்கூடுமே அவர்களுக்கு பயன்படட்டும் இதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன ஆனால் நான் இரண்டு வழிமுறைகளை மட்டுமே எழுதப்போகிறேன்.

இது ஒரு யூடியுப் டவுன்லோடர் மென்பொருள் இது 4எம்பி அளவுள்ளதாகும் தரவிறக்கி யூடியுப் டவுன்லோடர்இதை வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு ஷார்ட்கட் ஐகானாக வந்து அமர்ந்திருக்கும்.

இனி அதை திறப்பதன் மூலம் அதில் உங்கள் யூடியுப் உரலை ஒட்டி டவுன்லோட் என்பதை கிளிக்கினால் போதும் வீடியோ டவுண்டோட் தரவிறங்க தொடங்கிவிடும் ஆனால் இதில் ஒரு குறை இருக்கிறது வீடியோவை MP4 ஆக மட்டுமே தரவிறக்க முடியும்.



இது ஒரு நெருப்பு நரி ஆட் ஆன் இதை தரவிறக்க யூடியுப் டவுன்லோடர் நெருப்பு நரி ஆட் ஆன் செல்லவும் இங்கு நான் கீழிருக்கும் படத்தில் அடையாளப்படுத்தியுள்ள அந்த Easy Youtube Video Downloader தரவிறக்கவும்.



கீழிருக்கும் படத்தை பாருங்கள் இப்போது உங்கள் யூடியுப் தளத்தில் புதிதாக ஒரு தெரிவு வந்திருக்கிறது பார்த்தீர்களா அதில் மூன்று வகையான தெரிவுகள் இருக்கின்றன அதன் வழியாக 3GP, MP3, MP4 என எந்த பார்மட்டிலும் தரவிறக்கலாம் இதை போல நிறைய ஆட் ஆன்கள் இருக்கின்றன ஆனால் எனக்கு இது தான் எளிமையான வழிமுறையாகவும் சிறப்பானதாகவும் இருக்கிறது.



என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.