-->

இமேஜ் கன்வெர்ட்டர் (Image Convertor)

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு புகைப்படம் பற்றியது நாம் அன்றாடம் எத்தனையோ விதமான காரணங்களுக்காக புகைப்படங்களை பயன்படுத்துகிறோம் அதிலும் ஸ்டுடியோ, மற்றும் வலைப்பூக்களில் புகைப்படம் அதிகமாக பயன்படுத்துகிறோம், இதனால் படிக்கும் நபர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும்.

புகைப்படங்களை பொருத்தவரை நிறையவிதமான பார்மட்டுக்கள் இருக்கின்றன அதில் நாம் குறிப்பாக JPG, BMP, GIF என்பது போன்ற பார்மட்டுகளை நாம் வலைப்பூக்களில் பயன்படுத்துகிறோம் உதாரணமாக நாம் ஒரு ஸ்கீரின் ஷாட் எடுத்து நாம் மைக்ரோசாப்டின் பெயிண்டில் திறந்தால் அங்கு டிபால்ட்டாக இருக்கும் பார்மாட் BMP நல்ல தரமானாதாக இருக்கும் ஆனால் அளவு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் கொஞ்சம் தரம் மாறாமல் அளவை குறைக்க JPG பார்மட் பயன்படுத்தலாம் அதே நேரத்தில் போட்டோஷாப்பில் PSD எனும் பார்மட் இருக்கிறது அதன் அளவு இவை எல்லாவற்றையும் விட அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் அதில் இருக்கும் பயன்பாடுகளும் இருக்கும்.

நாம் இந்த பதிவின் வழியாக பார்க்கபோவது ஒரு பார்மட்டில் இருந்து வேறொரு பார்மட்டிற்கு எளிதாக எப்படி மாற்றுவது என்பதை பற்றித்தான் இதற்கு நிறைய மென்பொருள்கள் இனையத்தில் கிடைக்கின்றன ஆனால் இந்த மென்பொருள் ஒரே நேரத்தில் பலவிதமான பார்மட்டுகளை கையாலும் விதத்தில் இருக்கின்றன இதன் வழியாக JPG, BMP,GIF, GreyScale, Rotate இப்படி விதமான செயல்களை எளிதாக செய்யமுடியும்.

இனி இந்த இமேஜ் கன்வெர்ட்டர் Image Convertor தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் மிக குறைந்த அளவுள்ள மென்பொருள்தான் இனி உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் இதன் ஷார்ட்கட் ஐகானை கிளிக்கினால் கீழிருக்கும் படத்தை போல வரும்.



இனி இடது பக்கம் இருக்கும் லோக்கல் டிஸ்க் வழியாக நீங்கள் மாற்ற விரும்பும் படங்களை தனியாகவோ அல்லது மொத்தமாகவோ தெரிவுசெய்து கன்வெர்ட் என்பதை கிளிக்கினால் போதும் எல்லாம் சில நொடிகளில் மாற்றிவிடலாம் இதன் வழியாக வேண்டுமானால் கலர் படங்களை கிரே கலராக மாற்றவும் படங்களை திருப்பும் வசதியும் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள் விரும்புவீர்கள்.

போதுமான நேரமின்மையால் முழுமையாக எழுதமுடியவில்லை இருப்பினும் இதில் விரிவாக எழுதும் அளவிற்கு ஒன்றுமில்லை மிக எளிமையான மென்பொருள்.என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.