-->

இமேஜ் ரீஸைசர் (Image Resizer)

இந்த பதிவு பலருக்கு பயன்படும் ஆனால் எப்போது இதன் தேவை வருமென்று தெரியாது, அதனால் என்ன தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் தவறில்லை,என்னவென்றே தெரியவில்லை கடந்த சில பதிவுகள் தொடர்ச்சியான புகைப்படம் பற்றியதாகவே அமைந்துவிட்டது சரி இனி இந்த Resizer மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவுங்கள் சில நொடிகளில் இன்ஸ்டால் ஆகிவிடும்.

இந்த மென்பொருள் வாயிலாக உங்களிடம் இருக்கும் பலதரப்பட்ட அளவுகளில் உள்ள புகைப்படங்களை மிக எளிதாக ஒரே மாதிரியான அளவுகளுக்கு கொண்டுவந்துவிடலாம் பொதுவாக கணினியில் ஏதாவது ஒரு தகவலில் அடிப்படையில் புகைப்படத்தையும் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் மேலும் Access-ல் புகைப்படம் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருள் வாயிலாக மாற்றம் ஏற்படுத்திக்கொண்டு பயன்படுத்தலாம் காரணம் நம்மிடம் பத்து புகைப்படத்தை மட்டுமே நாம் பயன்படுத்த போகிறோம் என்றால் ஒன்றும் பிரச்சினையில்லை ஒவ்வொன்றாகவே செய்து முடித்துவிடலாம் ஆனால் ஒரு நிறுவணத்தில் இருக்கும் 5000 நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்த நினைத்தால் ஒவ்வொன்றையும் தனியாக செய்யமுடியாதல்லவா! சமீபத்தில் தான் இதன் தேவை நமக்கும் வந்தது.

இனி உங்கள் மென்பொருளை இயக்க தொடங்குங்கள் இதில் நீங்கள் ஒரு புகைப்படத்தையோ அல்லது மொத்தமாகவோ மாற்றும் வசதி இருக்கிறது . நான் இதில் பயன்படுத்தி இருக்கும் புகைப்படத்தின் அளவு 6x9 Ft ஆகும் ஆனால் சில நிமிடங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் அளவிற்க்கு உங்கள் விருப்பம் போல மாற்றி கொடுத்துவிடும்.

(இந்த புகைப்படத்தை 5x8 Inch ஆக இருந்தது அதை நமது கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட சிறிய புகைப்படங்களை தரம் குறையாமல் பெரிதாக்கலாம் வாயிலாக மாற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்க)



இதில் பாருங்கள் பிரிவியூ என்பதில் படத்தின் அளவு பெரியது என்பதால் காண்பிக்கவில்லை ஆனால் அளவை மாற்றி கொடுத்துவிடும் நான் 6x9 Ft அளவுள்ள ஒரு புகைப்படத்தை உள்ளிட்டு 5X8 Inch ஆக மாற்றியிருக்கிறேன் மிக எளிமையானது பயன்படுத்தி பாருங்கள் ஆனால் இது போன்ற மென்பொருள்கள் எல்லா நண்பர்களுக்கும் தேவைப்படுமா என்பது தெரியவில்லை தேவைப்படும் நண்பர்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.



நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.