புகைப்படங்களை பயன்படுத்தும் போது,அடடா போட்டோஷாப் கற்று கொள்ளாமல் போனோமோ என்று நொந்து கொள்ளும் தருணங்கள் பலருக்கு உண்டாகலாம்.பேஸ்புக்கில் பதிவேற்றவோ அல்லது வேறு இணைய சேவைகளுக்காக புகைப்படத்தின் அளவை சுருக்கவோ மாற்றவோ வேண்டியிருக்கும் போது இப்படி போட்டோஷாப்பை நினைக்கத்தோன்றும்.
ஆனால் இணையத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு இணையதளம் இருக்கும் போது இதற்கு இருக்காதா என்ன?
புகைப்படங்களை விரும்பிய அளவுக்கு சுருக்கி கொள்ள உதவும் வகையில் கிராப்.மீ தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
எந்த புகைப்படத்தையும் இந்த தளத்தின் மூலம் போட்டோஷாப் உதவி இல்லாமலே சுருக்கி கொள்ளலாம்.
இந்த சேவையை பயன்படுத்துவது மிகவும் சுலபம்.அளவை மாற்ற வேண்டிய புகைப்படத்தை இந்த தளத்தில் பதிவேற்றி விட்டு ,சுருக்கித்தா சீசே என கட்டளையிட்டால் அந்த படத்தை விரும்பிய அளவில் மாற்றித்தந்து விடுகிறது.
பரவலாக இணையத்தில் பயன்படுத்தப்படும் அளவுகள் இந்த தளத்திலேயே பரிந்துரைக்கப்படுகிறது.அவை போதும் என்றால் அவற்றில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.இல்லை என்றால் தேவையான அளவை குறிப்பிட்டு அதற்கேற்ற புகைப்படத்தை பெற்றுக்கொள்ளலாம்.ஒரே படத்தில் பல அளவுகளையு பெறும் வசதி இருக்கிறது.
எந்த சாப்ட்வேரையும் டவுண்லோடு செய்யாமலேயே இதனை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.
இணையதள முகவரி;http://cropp.me/