-->

உபயோகமான சில வலைதளங்கள்

* www.rtoaifmvd.com

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
* www.consumer.tn.gov.in
தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நுகர்வோரின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள இணையதளம். நுகர்வோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் நுகர்வோருக்கான உரிமைகள், சட்டங்கள், குறைகளை நீக்கும் முறை, புகார் கொடுக்கும் முறை, நிவாரணம் பெறுதல் ஆகியன விளக்கப்பட்டுள்ளன.


* www.tnreginet.net
சொந்தமான வீடு, காலி இடம், தோட்டம், காடு வாங்க நினைப்பவர்கள் தாங்கள் வாங்கப் போகும் இடம் தற்போது யாருக்கு சொந்தமாக உள்ளது? இதற்கு முன்பு அதனை அனுபவித்தவர் யார்? அந்த இடத்தின் பேரில் ஏதேனும் வங்கிக் கடன் வாங்கப்பட்டுள்ளதா? அதனை சரியான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ளனரா? வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கான வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்கு உதவி புரியம் இணையதளம்.
* www.shakespeare.mit.edu
வில்லியம் ஷேக்ஸ்பியரையும் அவரது படைப்புகளையும் தெரிந்து கொள்ள உதவும் இணையதளம்.
shakespeare.palomar.edu/works.html என்ற முகவரியில் பதிப்புகள் பிரித்தளிக்கப்பட்டு, புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்புடைய ஆய்வு வழிகாட்டியும் இடம் பெற்றுள்ளது.
* www.tngovbloodbank.in
இரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களுக்கும், இரத்தம் தேவைப்படுவோருக்கும் பயனுள்ள இணையதளம்.
* www.taluk.tn.nic.in
சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் தங்களின் பட்டா விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் இணையதளம்.